அரசியல் என்ட்ரி தொடர்பாக பதில் சொன்ன நடிகர் சூர்யா!

  • November 9, 2020 / 10:05 PM IST

முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா நடித்து, தயாரித்துள்ள புதிய படம் ‘சூரரைப் போற்று’. ‘ஏர் டெக்கான்’ விமான நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ள இப்படத்தை பெண் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார்.

இதில் சூர்யா ‘நெடுமாறன் ராஜாங்கம்’ என்ற கேரக்டரில் வலம் வரவுள்ளார். அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளாராம். மேலும், டோலிவுட் நடிகர் மோகன் பாபு, பாலிவுட் நடிகர்கள் பரேஷ் ராவல் – ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் மிக முக்கிய ரோல்களில் நடித்திருக்கிறார்கள்.

இப்படம் வருகிற நவம்பர் 12-ஆம் தேதி ‘அமேசான் ப்ரைம்’-யில் ரிலீஸாகப்போகிறது. ‘சூரரைப் போற்று’ படத்துக்கு பிறகு சூர்யா நடிப்பில் ‘வாடிவாசல்’ மற்றும் இயக்குநர் பாண்டிராஜ் படம் என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், அரசியல் என்ட்ரி தொடர்பாக நடிகர் சூர்யா மீடியாவுக்கு கொடுத்த ஒரு பேட்டியில் “எனக்கு இப்போ அரசியல் என்ட்ரி பற்றிய எண்ணங்களே கிடையாது” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus