தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா நடித்து அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் “சூரரைப்போற்று”. இந்த படத்தின் “காட்டு பயலே” என்ற பாடல் சூர்யா பிறந்தநாளன்று வெளியானது முதலே இந்த படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
தற்போது புதிய தகவல் என்னவென்றால் சூர்யா இந்தப் படத்தில் பணிபுரிந்த ஒருவருக்கு ட்விட்டர் பதிவு மூலம் தனது நன்றியை தெரிவித்துள்ளார். சுதா கொங்கரா இயக்கத்தில் 2 டி மற்றும் சிக்யா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் தயாரிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் “சூரரைப்போற்று”.
இந்த படத்தில் நடிகர் சூர்யாவுடன் அபர்ணா பாலமுரளி, ஜாக்கி ஷெராப், ஊர்வசி, மோகன் பாபு, பரேஷ் ரவால், சம்பத்ராஜ், கருணாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.
நிக்கத் பொம்மி ரெட்டி இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏர் டெக்கான் உரிமையாளர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றைக் கதையாகக் கொண்டுள்ள இந்த திரைப்படம் ஏற்கனவே ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருந்த நிலையில் சமீபத்தில் இந்தப் படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி இரண்டுமே தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதையடுத்து கடைசியாக சூர்யா பிறந்தநாளன்று வெளியான “காட்டு பயலே” பாடல் யூடியூபில் முன்னணியில் இருக்கிறது. இதனால் மகிழ்ச்சி அடைந்த நடிகர் சூர்யா இந்தப் படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாருக்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சூர்யா குறிப்பிட்டுள்ளதாவது ” ஒவ்வொரு முறையும் புதுமை கொடுக்கும் உங்கள் திறமையை கண்டு பிரம்மிக்கிறேன். சூரரைப்போற்று படத்தை சிறப்பாக்கியதற்கு நன்றி” என்றிருக்கிறார். இவர் கமெண்டிர்ருக்கு ரிப்ளை செய்துள்ள ஜிவி பிரகாஷ் இன்னும் இது போன்ற நிறைய படைப்புகளைத் தருவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
#KaattuPayale in top 100 songs India on YouTube … thank u https://t.co/5wQ78TjbdH
— G.V.Prakash Kumar (@gvprakash) August 4, 2020
Totally inspired by the way you reinvent yourself every time, thank u for making #SooraraiPottru more spl @gvprakash #KaattuPayale https://t.co/UQYRqB7S2z
— Suriya Sivakumar (@Suriya_offl) August 5, 2020
https://twitter.com/gvprakash/status/1290932606444302336?s=19