• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » “சரவணன்‌ சூர்யாவாக மாறியது நீங்கள் எடுத்த புகைப்படத்தால் தான்”… கே.வி.ஆனந்தின் மறைவு குறித்து சூர்யாவின் உருக்கமான அறிக்கை!

“சரவணன்‌ சூர்யாவாக மாறியது நீங்கள் எடுத்த புகைப்படத்தால் தான்”… கே.வி.ஆனந்தின் மறைவு குறித்து சூர்யாவின் உருக்கமான அறிக்கை!

  • May 1, 2021 / 12:05 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
“சரவணன்‌ சூர்யாவாக மாறியது நீங்கள் எடுத்த புகைப்படத்தால் தான்”… கே.வி.ஆனந்தின் மறைவு குறித்து சூர்யாவின் உருக்கமான அறிக்கை!

சினிமாவில் பாப்புலர் ஒளிப்பதிவாளராகவும், இயக்குநராகவும் வலம் வந்தவர் கே.வி.ஆனந்த். ஆரம்பத்தில் பத்திரிகைகளில் புகைப்படக் கலைஞராக வலம் வந்த கே.வி.ஆனந்த், அதன் பிறகு டாப் ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான பி.சி.ஸ்ரீராமிடம் உதவி ஒளிப்பதிவாளராக சில படங்களில் பணியாற்றினார். பின், தமிழில் ‘காதல் தேசம், நேருக்கு நேர், முதல்வன், விரும்புகிறேன், பாய்ஸ், செல்லமே, சிவாஜி’, ஹிந்தியில் ‘காக்கி, நாயக் : தி ரியல் ஹீரோ, ஜோஷ்’ போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார் கே.வி.ஆனந்த். தமிழ் மற்றும் ஹிந்தி மொழி மட்டுமில்லாமல் மலையாள மொழியிலும் சில படங்களுக்கு இவர் ஒளிப்பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

டாப் ஒளிப்பதிவாளர்களின் லிஸ்டில் இருந்த கே.வி,ஆனந்த், ‘கனா கண்டேன்’ படத்தை முதன் முதலாக இயக்கி இயக்குநர் அவதாரம் எடுத்தார். ‘கனா கண்டேன்’ படத்துக்கு பிறகு சூர்யாவை வைத்து ‘அயன், மாற்றான், காப்பான்’, ஜீவாவை வைத்து ‘கோ’, தனுஷை வைத்து ‘அனேகன்’, ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியை வைத்து ‘கவண்’ ஆகிய படங்களை இயக்கினார் கே.வி.ஆனந்த். இதனைத் தொடர்ந்து கே.வி.ஆனந்த் அவரது புதிய படத்துக்கான ஸ்க்ரிப்ட் வொர்க்கில் பிஸியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 30-ஆம் தேதி) கே.வி.ஆனந்துக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இயற்கை எய்தினார்.

தற்போது, கே.வி.ஆனந்தின் மறைவு தொடர்பாக நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் “கே.வி.ஆனந்த்‌ சார்‌… இது ‘பேரிடர்‌ காலம்‌’ என்பதை உங்கள்‌ மரணம்‌ அறைந்து நினைவூட்டுகிறது. நீங்கள்‌ இல்லை என்ற உண்மை, மனமெங்கும்‌ அதிர்வையும்‌, வலியையும்‌ உண்டாக்குகிறது. ஏற்க முடியாத உங்கள்‌ இழப்பின்‌ துயரத்தில்‌, மறக்க முடியாத நினைவுகள்‌ அலை அலையாக உயிர்த்தெழுகின்றன.

நீங்கள்‌ எடுத்தப்‌ புகைப்படங்களில்தான்‌, ‘சரவணன்‌ சூர்யாவாக’ மாறிய அந்த அற்புதத்‌ தருணம்‌ நிகழ்ந்தது. ‘முன்பின்‌ அறிமுகமில்லாத ஒருவனை’ சரியான கோணத்தில்‌ படம்பிடித்துவிட வேண்டுமென, இரண்டு மணிநேரம்‌ நீங்கள்‌ கொட்டிய உழைப்பை இப்போதும்‌ வியந்து பார்க்கிறேன்‌. ‘மெட்ராஸ்‌ டாக்கீஸ்‌’ அலுவலகத்தில்‌, அந்த இரண்டு மணிநேரம்‌, ஒரு போர்களத்‌தில்‌ நிற்பதைப்‌ போலவே உணர்ந்தேன்‌.

‘நேருக்கு நேர்‌’ திரைப்படத்திற்காக நீங்கள்‌ என்னை எடுத்த, அந்த ‘ரஷ்யன்‌ ஆங்கிள்’ புகைப்படம்தான்‌, இயக்குனர்‌ திரு. வசந்த்‌, தயாரிப்பாளர்‌ திரு. மணிரத்னம்‌ உள்ளிட்ட அனைவருக்கும்‌, என்மீது நம்பிக்கை வர முக்‌கிய காரணம்‌. புகைப்படத்தைவிட பத்தாயிரம்‌ மடங்கு பெரியதாக முகம்‌ தோன்றும்‌ வெள்ளித்‌திரையிலும்‌, நடிகனாக என்னை படம்பிடித்ததும்‌ நீங்கள்தான்‌.

முதன்முதல்‌ என்‌ மீது பட்ட வெளிச்சம்‌, உங்கள்‌ கேமராவில்‌ இருந்து வெளிப்பட்டது. அதன் மூலம் தான்‌ என்‌ எதிர்காலம்‌ பிரகாசமானது. என்னுடைய திரையுலகப்‌ பயணத்தில்‌ உங்களின்‌ பங்களிப்பும்‌, வழிகாட்டலும்‌ மறக்கமுடியாதது. ‘வளர்ச்‌சிக்கு நீ இதையெல்லாம்‌ மாற்றிக்கொள்ள வேண்டும்‌’ என அன்புடன்‌ அக்கறையுடன்‌ சொன்ன வார்த்தைகள்‌ இப்போதும்‌ என்னை வழிநடத்துகின்றன.

இயக்குனராக ‘அயன்‌’ திரைப்படத்திற்கு நீங்கள்‌ உழைத்த உழைப்பு, ஒரு மாபெரும்‌ வெற்றிக்காக காத்திருந்த எனக்குள்‌, புதிய உத்வேகத்தை அளித்தது. ‘அயன்‌’ திரைப்படத்‌தின்‌ வெற்றி, ‘அனைவருக்கும்‌ பிடித்த நட்சத்‌திரமாக’ என்னை உயர்த்‌தியது என்பதை நன்றியுடன்‌ நினைத்துப்‌ பார்க்‌கிறேன்‌. எனது முதல்‌ திரைப்படத்தில்‌ நீங்களும்‌, உங்களின்‌ கடைசி திரைப்படத்தில்‌ நானும்‌ பணியாற்றியது இயற்கை செய்த முரண்‌. எங்கள்‌ நினைவில்‌ என்றும்‌ நீங்கள்‌ வாழ்வீர்கள்‌ சார்‌. இதயப்பூர்வமான நன்றி அஞ்சலி. நினைவுகளுடன் சூர்யா” என்று கூறியுள்ளார்.

We will miss you sir!! pic.twitter.com/Nqz2b0sqY2

— Suriya Sivakumar (@Suriya_offl) April 30, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #KV Anand
  • #Suriya

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Suriya & Vaaranam Aayiram : ரீ-ரிலீஸான சூர்யாவின் ‘வாரணம் ஆயிரம்’… கர்நாடகாவில் செய்த வசூல் சாதனை!

Suriya & Vaaranam Aayiram : ரீ-ரிலீஸான சூர்யாவின் ‘வாரணம் ஆயிரம்’… கர்நாடகாவில் செய்த வசூல் சாதனை!

Kanguva : சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் அட்டகாசமான அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்!

Kanguva : சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் அட்டகாசமான அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்!

Suriya & Ravikumar : சூர்யா – ‘அயலான்’ ரவிக்குமார் கூட்டணியில் உருவாகப்போகும் படத்தின் ஷூட்டிங் எப்போது ஆரம்பம்?

Suriya & Ravikumar : சூர்யா – ‘அயலான்’ ரவிக்குமார் கூட்டணியில் உருவாகப்போகும் படத்தின் ஷூட்டிங் எப்போது ஆரம்பம்?

Kanguva : சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் அசத்தலான அப்டேட் கொடுத்த ஒளிப்பதிவாளர் வெற்றி!

Kanguva : சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் அசத்தலான அப்டேட் கொடுத்த ஒளிப்பதிவாளர் வெற்றி!

Suriya & Jyotika : தனது மனைவியும், நடிகையுமான ஜோதிகாவுடன் பின்லாந்துக்கு சுற்றுலா சென்ற சூர்யா… வைரலாகும் வீடியோ!

Suriya & Jyotika : தனது மனைவியும், நடிகையுமான ஜோதிகாவுடன் பின்லாந்துக்கு சுற்றுலா சென்ற சூர்யா… வைரலாகும் வீடியோ!

Kanguva : சூர்யா – சிவா கூட்டணியில் உருவாகும் ‘கங்குவா’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Kanguva : சூர்யா – சிவா கூட்டணியில் உருவாகும் ‘கங்குவா’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version