தமிழ்சினிமாவில் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக மாறியவர் விஜய்மில்டன். ஒளிப்பதிவாளராக பல வெற்றிப் படங்களில் பணியாற்றிய இவர், கடந்த 2014ஆம் ஆண்டு “கோலிசோடா” என்ற படத்தை இயக்கினார்.
இந்த படத்தின் அபார வெற்றியைத் தொடர்ந்து விக்ரம் நடிப்பில் “10 எண்றதுக்குள்ள” படத்தை இயக்கினார். பின் “கோலிசோடா 2” இயக்கிய விஜய் மில்டன், அடுத்து எந்தப் படத்தை இயக்கப்போகிறார் என்பது பற்றிய அறிவிப்பை நடிகர் சூர்யா வெளியிட போவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படம் பற்றிய அறிவிப்பை நடிகர் சூர்யா நாளை காலை 10 மணிக்கு அறிவிப்பார் என்று தற்போது 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் தற்போது சூர்யா பிறந்தநாள் சிடிபி வெளியிடப்பட்டுள்ளது. இந்த பிறந்தநாள் CDP அவரது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
சூர்யா நடிகர் மட்டுமல்லாது 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளரும் ஆவார். வருகிற ஜூலை 23ஆம் தேதி இந்த நடிகர் தனது 45வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். அதற்கான CDPதான் தற்போது வெளியாகியுள்ளது.
சூர்யா நடிப்பில் “சூரரைப்போற்று” திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து இவர் “வாடிவாசல்” படத்தில் நடிக்கவுள்ளார்.அதுமட்டுமின்றி 24 பார்ட் 2 படத்திலும் நடிக்க உள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.