சூர்யா ட்ரிபிள் ஆக்ஷனில் நடித்திருந்த ’24’… இதன் மொத்த வசூல் இத்தனை கோடியா?

  • November 6, 2022 / 01:17 PM IST

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இப்போது சூர்யா நடிப்பில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’, இயக்குநர் பாலா இயக்கும் ‘வணங்கான்’, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘விக்ரம் 2’ மற்றும் இயக்குநர் சிவா படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் சிவா இயக்கும் படம் சூர்யாவின் கேரியரில் 42-வது படமாம். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடித்து வருகிறார். இதனை ‘ஸ்டுடியோ கிரீன்’ மற்றும் ‘UV கிரியேஷன்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

சமீபத்தில், வெளியிடப்பட்ட மோஷன் போஸ்டர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. இதன் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 2016-ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான படம் ’24’.

இந்த படத்தில் சூர்யா ட்ரிபிள் ஆக்ஷனில் நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான விக்ரம் குமார் இதனை இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் சமந்தா, நித்யா மேனன், சரண்யா பொன்வண்ணன், சத்யன், அஜய் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படம் உலக அளவில் ரூ.108 கோடி வசூல் செய்ததாம்.

Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus