‘சன் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் ‘சூர்யா 40’… இயக்குநர் யார் தெரியுமா?
October 26, 2020 / 04:06 PM IST
|Follow Us
முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா நடித்து, தயாரித்துள்ள புதிய படம் ‘சூரரைப் போற்று’. ‘ஏர் டெக்கான்’ விமான நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ள இப்படத்தை பெண் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார்.
இதில் சூர்யா ‘நெடுமாறன் ராஜாங்கம்’ என்ற கேரக்டரில் வலம் வரவுள்ளார். அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளாராம். இப்படம் வருகிற நவம்பர் 12-ஆம் தேதி ‘அமேசான் ப்ரைம்’-யில் ரிலீஸாகப்போகிறது. ‘சூரரைப் போற்று’ படத்துக்கு பிறகு சூர்யா, வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்க உள்ளார்.
தற்போது, நடிகர் சூர்யாவின் 40-வது படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர் பாண்டிராஜ் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரிக்க உள்ளதாம். இப்படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் ஜெட் ஸ்பீடில் நடந்து வருகிறதாம். இதன் ஷூட்டிங்கை வருகிற டிசம்பர் மாதம் ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளனர் படக்குழுவினர். இதனால் சூர்யா ரசிகர்கள் ஹேப்பி மோடுக்கு ஆக்டிவேட் ஆகியுள்ளனர்.