சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ டீசர் ரிலீஸுக்கான கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்!

  • December 1, 2021 / 02:23 PM IST

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இப்போது சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’, பாண்டிராஜ் இயக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்து வருகிறது.

இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் வினய்யும், மிக முக்கிய ரோலில் சத்யராஜும் நடிக்கிறார்கள். இதற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். சமீபத்தில், இதன் போஸ்டர்ஸ் மற்றும் 2 ப்ரோமோக்கள் ரிலீஸ் செய்யப்பட்டது.

இந்த போஸ்டர்ஸ் மற்றும் 2 ப்ரோமோக்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. படத்தை அடுத்த ஆண்டு (2022) பிப்ரவரி 4-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். தற்போது, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை வருகிற ஜனவரி 1-ஆம் தேதி நியூ இயர் ஸ்பெஷலாக வெளியிடத் திட்டமிட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus