சூர்யா – பாண்டிராஜ் காம்போவில் தயாராகும் ‘எதற்கும் துணிந்தவன்’… வெளியானது படத்தின் 3-வது லுக்!

  • July 23, 2021 / 02:05 PM IST

முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா நடித்து, தயாரித்த கடைசி படமான ‘சூரரைப் போற்று’ சமீபத்தில் OTT-யில் ரிலீஸானது. ‘சூரரைப் போற்று’ படத்துக்கு பிறகு சூர்யா நடிப்பில் கெளதம் மேனன் இயக்கும் ‘நவரசா’ வெப் சீரிஸ் மற்றும் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’, ‘சூர்யா 40’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் சூர்யாவின் 40-வது படத்தை பாப்புலர் இயக்குநர் பாண்டிராஜ் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்து வருகிறது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் வினய்யும், மிக முக்கிய ரோலில் சத்யராஜும் நடிக்கிறார்கள். இதற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார்.

இதன் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடந்து வருகிறது. நேற்று (ஜூலை 22-ஆம் தேதி) ‘சூர்யா 40’ படத்துக்கு ‘எதற்கும் துணிந்தவன்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளதாக அறிவித்ததுடன், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோவும், செகண்ட் லுக் போஸ்டரும் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று (ஜூலை 23-ஆம் தேதி) சூர்யாவின் பிறந்த நாள் என்பதால் இப்படத்தின் 3-வது லுக் போஸ்டரை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த போஸ்டர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus