மீண்டும் சினிமாவுக்கு வர தயாராக உள்ளேன் – சூர்யாவின் ஹீரோயின்!

  • September 11, 2020 / 10:00 AM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளியான ஸ்ரீ படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ருதிகா தற்போது மீண்டும் சினிமாவுக்கு வர தயாராக உள்ளதாக கூறியுள்ளார்.

சுமார் 17 வருடங்களாக திரையுலகம் பக்கம் வராமல் இருந்த இவர் தற்போது தன் மகன் வளர்ந்து விட்டதால் இனிமேல் சினிமாவில் நடிப்பதற்கு தயாராக இருப்பதாகவும் தன் குழந்தைக்காக தான் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்ததாகவும் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

சூர்யாவுடன் ஸ்ரீ படத்தில் நடித்த பின்பு ஆல்பம், நளதமயந்தி, தித்திக்குதே போன்ற படத்தில் நடித்திருந்தார். பின்பு தொழிலதிபர் அர்ஜுனை திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

தற்போது தன் கணவருடனும் குழந்தையுடனும் புகைப்படங்களை வெளியிட்டுள்ள ஸ்ருதிகா பத்து வயது மகனுக்கு தாய் போல இல்லாமல் அவ்வளவு இளமையாக தோற்றமளிக்கிறார்.

இவர் இவ்வாறு புகைப்படங்களை வெளியிடுவதன் நோக்கமே திரைப்படங்களில் வாய்ப்பு தேடுவதுதான் என்றும் நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள். சூர்யாவின் ஹீரோயின் 17 வருடங்களுக்குப் பின் மீண்டும் திரையுலகில் களமிறங்கவுள்ளார் என்று தற்போது இந்த செய்தியை அனைவரும் ஷேர் செய்து வருகிறார்கள். இவர் எந்த ரோலில் நடிப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus