இந்திய அளவில் முதலிடம், உலக அளவில் எத்தனையாவது இடம் தெரியுமா?… IMDB-யில் புதிய சாதனை படைத்த ‘ஜெய் பீம்’!

  • November 11, 2021 / 06:03 PM IST

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’, த.செ.ஞானவேல் இயக்கும் ‘ஜெய் பீம்’, பாண்டிராஜ் இயக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் த.செ.ஞானவேல் இயக்கியுள்ள ‘ஜெய் பீம்’, சூர்யாவின் கேரியரில் 39-வது படமாம்.

இப்படம் கடந்த நவம்பர் 2-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக பிரபல OTT தளமான ‘அமேசான் ப்ரைம்’-யில் ரிலீஸானது. சூர்யா வக்கீலாக நடித்திருந்த இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன், ராவ் ரமேஷ், குரு சோமசுந்தரம், தமிழ், எம்.எஸ்.பாஸ்கர், ஜெயபிரகாஷ், இளவரசு, சுஜாதா சிவக்குமார், சிபி தாமஸ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இந்த படத்துக்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார், எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்திருந்தார். இப்படத்தை பார்த்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும், விமர்சகர்களும் பாராட்டிய வண்ணமுள்ளனர். தற்போது, பிரபல திரைப்பட ரேட்டிங் தளமான ‘IMDB’யில் அதிக ரேட்டிங் பெற்ற படங்களின் லிஸ்ட்டில் ‘ஜெய் பீம்’ (9.6/10) இந்திய அளவில் முதலிடத்தையும், உலக அளவில் 141-வது இடத்தையும் பிடித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் ஹேப்பி மோடுக்கு ஆக்டிவேட் ஆகியுள்ளனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus