ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் சூர்யாவின் ‘ஜெய் பீம்’… ரிலீஸானது மேக்கிங் வீடியோ!

  • November 3, 2021 / 06:44 PM IST

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’, த.செ.ஞானவேல் இயக்கும் ‘ஜெய் பீம்’, பாண்டிராஜ் இயக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் த.செ.ஞானவேல் இயக்கியுள்ள ‘ஜெய் பீம்’, சூர்யாவின் கேரியரில் 39-வது படமாம்.

இப்படம் நேற்று (நவம்பர் 2-ஆம் தேதி) பிரபல OTT தளமான ‘அமேசான் ப்ரைம்’-யில் ரிலீஸானது. சூர்யா வக்கீலாக நடித்துள்ள இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன், ராவ் ரமேஷ், குரு சோமசுந்தரம், தமிழ், எம்.எஸ்.பாஸ்கர், ஜெயபிரகாஷ், இளவரசு, சுஜாதா சிவக்குமார், சிபி தாமஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார், எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்தை பார்த்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும், விமர்சகர்களும் பாராட்டிய வண்ணமுள்ளனர். இந்நிலையில், இன்று இந்த படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus