Kanguva : சூர்யாவின் ‘கங்குவா’… வெளியானது பாபி தியோலின் கேரக்டர் போஸ்டர்!

  • January 27, 2024 / 12:12 PM IST

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இப்போது இவர் நடிப்பில் இயக்குநர் சிவாவின் ‘கங்குவா’, இயக்குநர் வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ மற்றும் இயக்குநர் சுதா கொங்கரா படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘கங்குவா’ சூர்யாவின் கேரியரில் 42-வது படமாம். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடித்து வருகிறார். மேலும், மிக முக்கிய ரோல்களில் பாபி தியோல், ஜெகபதி பாபு, நட்டி ஆகியோர் நடிக்கிறார்கள். இதனை ‘ஸ்டுடியோ கிரீன்’ மற்றும் ‘UV கிரியேஷன்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

இதற்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான ‘ராக்ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார், வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில், இப்படத்தின் போஸ்டர்ஸ் மற்றும் GLIMPSE வெளியிடப்பட்டது.

இந்த போஸ்டர்ஸ் & GLIMPSE படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. இதன் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், இன்று நடிகர் பாபி தியோலின் பர்த்டே ஸ்பெஷலாக அவரின் கேரக்டர் போஸ்டரை ரிலீஸ் செய்துள்ளனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus