முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யாவுக்கு இன்று (ஜூலை 23-ஆம் தேதி) பிறந்த நாள். இப்போது சூர்யா கைவசம் ‘சூரரைப் போற்று, வாடிவாசல், அருவா’ என அடுத்தடுத்து மூன்று படங்கள் லைன்-அப்பில் இருக்கிறது. இன்று சூர்யாவின் பர்த்டே சர்ப்ரைஸாக, ‘சூரரைப் போற்று’ படத்தில் இடம்பெற்ற ‘காட்டுப் பயலே’ பாடலும், ‘வாடிவாசல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது.
இதனால் சூர்யாவின் ரசிகர்கள் ஹேப்பி மோடுக்கு ஆக்டிவேட் ஆகியுள்ளனர். இந்த சந்தோஷ தருணத்தை அதிகப் படுத்தும் விதத்தில் இன்னொரு செய்தியும் வந்தது. ‘மாநகரம், கைதி’ போன்ற படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் சூர்யாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை சொன்னதுடன், தான் அடுத்ததாக பண்ணப்போகும் ஃபேண்டசி படம் சூர்யாவுடன் என்று பதிவிட்டிருந்தார்.
அனைவருமே இதை உண்மை என நம்பி ரீட்வீட் செய்த வண்ணமிருந்தனர். இது தொடர்பாக படக்குழுவினரிடம் விசாரித்த போது “இந்த செய்தி உண்மையல்ல” என்று கூறினார்கள். அதன் பிறகு தான் இது ஃபேக் ஐடி என்று தெரியவந்தது. ‘கைதி’ படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாஸ்டர்’ ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.