மீண்டும் ‘ஜெய் பீம்’ பட இயக்குநருடன் கூட்டணி அமைக்கும் சூர்யா… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

  • May 23, 2022 / 08:40 PM IST

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இப்போது சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’, இயக்குநர் பாலா இயக்கும் படம் என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘வாடிவாசல்’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2020-ஆம் ஆண்டு ஜூலை 23-ஆம் தேதி சூர்யாவின் பர்த்டே சர்ப்ரைஸாக வெளி வந்தது.

இந்த படத்தை முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான கலைப்புலி.எஸ்.தாணு தனது ‘V கிரியேஷன்ஸ்’ மூலம் தயாரிக்கிறார். 120 நாளில் இப்படத்தை எடுத்து முடிக்க ப்ளான் போட்டுள்ளாராம் இயக்குநர் வெற்றிமாறன். சமீபத்தில், பாலா இயக்கும் படத்தின் ஷூட்டிங் ஆரம்பமானது.

இவ்விரண்டு படங்கள் மட்டுமில்லாமல் ‘உலக நாயகன்’ கமல் ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் சூர்யா. இப்படம் வருகிற ஜூன் 3-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில், சூர்யா நடிக்கவிருக்கும் புதிய படத்தை ‘ஜெய் பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை சூர்யாவே தனது ‘2D எண்டர்டெயின்மெண்ட்’ மூலம் தயாரிக்கவுள்ளாராம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus