எஸ்.ஏ.சந்திரசேகர் முதலில் விஜயகாந்த் மற்றும் விஜய்யை வைத்து இந்த படத்தை எடுக்க திட்டமிட்டிருந்தார், ஆனால் அந்த திட்டம் நிறைவேறாமல் போனது. 1998 ஆம் ஆண்டு விஜய்யின் பிஸியான ஷெட்யூல் காரணமாக சந்திரசேகர் சூர்யாவை விஜயகாந்துடன் இணைந்து ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க வைத்தார் .
இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மீனா தேர்ந்தெடுக்கப்பட்டார். சந்திரசேகர் முதலில் மும்பையில் இருந்து தனுஜா என்ற மாடலை சூர்யாவுக்கு ஜோடியாக தேர்வு செய்தார், ஆனால் பின்னர் தனது முடிவை மாற்றிக்கொண்டார். இந்த பாத்திரம் நடிகை ஈஸ்வரி ராவின் சகோதரியான மானசாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
விஜயகாந்த், சூர்யா, இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் மூத்த தயாரிப்பாளர்கள் ஏ.எல்.அழகப்பன் மற்றும் இப்ராஹிம் ரௌதர் ஆகியோர் கலந்து கொண்டு 1998 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இந்தத் திரைப்படம் தொடங்கப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் சென்னை பிலிம் சிட்டியில் நடைபெற்றது. 56 லட்சம் பட்ஜெட்டில் உருவான இந்த படம் 67 லட்சம் வசூல் செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .