திருவள்ளுவர் சிலை முன்பு சூர்யா !

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் . இவர் நடித்த எதற்கும் துணிந்தவன் படம் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்றது.இந்த நிலையில் நடிகர் சூர்யா தனது அடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் .

அந்த வகையில் நடிகர் சூர்யா இப்பொழுது பாலா இயக்கத்தில் சூர்யா 41 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் . தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி மற்றும் மலையாள நடிகை மமிதா பைஜூ முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் . இந்த படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்து வந்தது .

ஒரு பாடல் காட்சி மற்றும் சூர்யாவின் முக்கியமான காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டது . இந்த நிலையில் நடிகர் சூர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் . திருவள்ளுவர் சிலை முன்பு சூர்யா நின்று கொண்டு இருக்கும் அந்த புகைப்படம் இப்பொழுது வைரலாகி வருகிறது .

சூர்யாவின் இந்த புகைப்படத்தை ரசிகர்கள் இணையத்தில் ஷேர் செய்துக்கொண்டு வருகின்றனர். சூர்யா கன்னியாகுமரியில் படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது .அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்க படுகிறது .

Share.