‘கங்குவா’வை இயக்கும் இயக்குநர் சிவா… இதற்காக சூர்யாவுக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் எவ்ளோ தெரியுமா?

  • May 30, 2023 / 02:41 PM IST

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இப்போது இவர் நடிப்பில் இயக்குநர் சிவாவின் ‘கங்குவா’, இயக்குநர் வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம் 2’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘கங்குவா’ சூர்யாவின் கேரியரில் 42-வது படமாம். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடித்து வருகிறார். இதனை ‘ஸ்டுடியோ கிரீன்’ மற்றும் ‘UV கிரியேஷன்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

இதற்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான ‘ராக்ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார், வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில், இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் வெளியிடப்பட்டது.

இந்த மோஷன் போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்திற்காக நடிகர் சூர்யாவுக்கு ரூ.60 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus