அடேங்கப்பா… ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்துக்காக சூர்யா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?
October 14, 2022 / 10:16 PM IST
|Follow Us
சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இப்போது சூர்யா நடிப்பில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’, இயக்குநர் பாலா இயக்கும் ‘வணங்கான்’, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘விக்ரம் 3’ மற்றும் இயக்குநர் சிவா படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் சிவா இயக்கும் படம் சூர்யாவின் கேரியரில் 42-வது படமாம். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடித்து வருகிறார். இதனை ‘ஸ்டுடியோ கிரீன்’ மற்றும் ‘UV கிரியேஷன்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.
சமீபத்தில், வெளியிடப்பட்ட மோஷன் போஸ்டர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. இதன் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 2018-ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’.
இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன் இதனை இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் நந்தா, ரம்யா கிருஷ்ணன், கார்த்திக், சுரேஷ் மேனன், கலையரசன் மற்றும் பலர் நடித்திருந்தனர். தற்போது, இந்த படத்துக்காக சூர்யா ரூ.25 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.