நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஸ்ரீ படத்தின் வசூல் ?

  • September 22, 2022 / 12:03 AM IST

நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தை இயக்கியவர் இயக்குனர் பாண்டியராஜ். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா ,இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க உள்ள வாடிவாசல் படத்தின் டெஸ்ட் ஷூட் சென்னையில் நடந்தது. வெற்றிமாறன் சூரி நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார்.அந்த படம் வெளியான பின் வாடிவாசல் படம் முழுவதுமாக தொடங்கும் என்று கூறப்படுகிறது.

பாலா மற்றும் சூர்யா கூட்டணியில் உருவாகும் வணங்கான் படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதத்திற்கு தள்ளிப்போய் உள்ளது . இதனால் சூர்யா மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது .

மிக பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் 10 மொழிகள் வெளியாக உள்ளது . மேலும் 3டி தொழில்நுட்பத்தில் இந்த படம் உருவாக உள்ளது என்றும் படக்குழு அறிவித்துள்ளது . இந்நிலையில் சமீபத்தில் சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது . இந்நிலையில் படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு கோவாவில் தொடங்கி உள்ளது . மிகப்பெரிய செட் அங்கு போடப்பட்டுள்ளது என்றும் பாலிவுட் நடிகை திஷா இதில் கலந்து கொள்கிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது .

இந்நிலையில் 2002-ம் ஆண்டு நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான படம் ஸ்ரீ .இந்த படத்தை புஷ்பவாசகன் இயக்கி இருந்தார் . குக் வித் கோமாளி புகழ் ஸ்ருதிகா இந்த படத்தில் நாயகியாக நடித்து இருந்தார் .88 லட்சம் பட்ஜெட்டில் வெளியான இந்த படம் 99 லட்சம் வசூல் செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus