சூர்யாவின் ‘வாடிவாசல்’ ஆடியோ ரைட்ஸை இத்தனை கோடிக்கு கைப்பற்றியதா பிரபல நிறுவனம்?

  • February 4, 2023 / 10:09 AM IST

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இப்போது இவர் நடிப்பில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘விக்ரம் 2’ மற்றும் இயக்குநர் சிவா படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘வாடிவாசல்’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2020-ஆம் ஆண்டு வெளி வந்தது.

இந்த படத்தை முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான கலைப்புலி.எஸ்.தாணு தனது ‘V கிரியேஷன்ஸ்’ மூலம் தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இதற்கு ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யவுள்ளார், ஜாக்கி கலை இயக்குநராக பணியாற்றவுள்ளார்.

சி.சு.செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ என்ற நாவலை மையமாக வைத்து இப்படத்திற்கு திரைக்கதை எழுதியிருக்கிறார் வெற்றிமாறன். இந்த படத்தின் பட்ஜெட் ரூ.98 கோடியாம். வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கப்போகிறார் என்ற செய்தி வந்ததில் இருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்திற்கு சென்று விட்டது. இதில் மிக முக்கிய ரோலில் இயக்குநர் அமீர் நடிக்கவிருக்கிறார்.

சமீபத்தில், இந்த படத்தின் டெஸ்ட் ஷூட் சென்னையில் நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோவும் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. தற்போது, இப்படத்தின் ஆடியோ ரைட்ஸை ரூ.17 கோடிக்கு ‘சரிகம’ நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus