வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா… எக்ஸ்பெக்டேஷன் லெவலை கூட்டிய ‘வாடிவாசல்’ ஃபர்ஸ்ட் லுக்!

  • July 23, 2020 / 02:55 PM IST

முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யாவுக்கு இன்று (ஜூலை 23-ஆம் தேதி) பிறந்த நாள். இப்போது சூர்யா கைவசம் ‘சூரரைப் போற்று, வாடிவாசல், அருவா’ என அடுத்தடுத்து மூன்று படங்கள் லைன்-அப்பில் இருக்கிறது. இன்று சூர்யாவின் பர்த்டே சர்ப்ரைஸாக, ‘வாடிவாசல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அப்படத்தின் இயக்குநர் வெற்றிமாறன்.

இந்த படத்தை முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான கலைப்புலி.எஸ்.தாணு தனது ‘V கிரியேஷன்ஸ்’ மூலம் தயாரிக்கவுள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ள இதற்கு ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யவுள்ளார், ஜாக்கி கலை இயக்குநராக பணியாற்றவுள்ளார்.

சி.சு.செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ என்ற நாவலை மையமாக வைத்து இப்படத்திற்கு திரைக்கதை எழுதியிருக்கிறார் வெற்றிமாறன். வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கப்போகிறார் என்ற செய்தி வந்ததில் இருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்திற்கு சென்று விட்டது. இன்று வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை இன்னும் கூட்டியுள்ளது. ‘கொரோனா’ பிரச்சனை முடிந்த பிறகு இந்த படத்துக்கான படப்பிடிப்பு துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://twitter.com/VetriMaaran/status/1286198311582539776

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus