‘வாடிவாசல்’ ஷூட்டிங்கிற்கு நாள் குறித்த வெற்றிமாறன்… ஹேப்பி மோடுக்கு ஆக்டிவேட்டான சூர்யா

  • July 31, 2020 / 01:51 PM IST

‘வாடிவாசல்’ ஷூட்டிங்கிற்கு நாள் குறித்த வெற்றிமாறன்… ஹேப்பி மோடுக்கு ஆக்டிவேட்டான சூர்யா ரசிகர்கள்!

முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இப்போது சூர்யா நடிப்பில் ‘சூரரைப் போற்று, வாடிவாசல், அருவா’ என அடுத்தடுத்து மூன்று படங்கள் லைன்-அப்பில் இருக்கிறது. கடந்த ஜூலை 23-ஆம் தேதி சூர்யாவின் பர்த்டே சர்ப்ரைஸாக, ‘வாடிவாசல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார் அப்படத்தின் இயக்குநர் வெற்றிமாறன்.

இந்த படத்தை முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான கலைப்புலி.எஸ்.தாணு தனது ‘V கிரியேஷன்ஸ்’ மூலம் தயாரிக்கவுள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ள இதற்கு ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யவுள்ளார், ஜாக்கி கலை இயக்குநராக பணியாற்றவுள்ளார். சி.சு.செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ என்ற நாவலை மையமாக வைத்து இப்படத்திற்கு திரைக்கதை எழுதியிருக்கிறார் வெற்றிமாறன்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கப்போகிறார் என்ற செய்தி வந்ததில் இருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்திற்கு சென்று விட்டது. தற்போது, இப்படத்திற்கான ஷூட்டிங்கை அடுத்த ஆண்டு (2021) ஏப்ரல் மாதம் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், படம் 2022-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

https://twitter.com/VetriMaaran/status/1286198311582539776

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus