Suriya & Vaaranam Aayiram : ரீ-ரிலீஸான சூர்யாவின் ‘வாரணம் ஆயிரம்’… கர்நாடகாவில் செய்த வசூல் சாதனை!

  • February 26, 2024 / 04:38 PM IST

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இப்போது இவர் நடிப்பில் இயக்குநர் சிவாவின் ‘கங்குவா’, இயக்குநர் வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ மற்றும் இயக்குநர் சுதா கொங்கரா படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

சூர்யாவின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘வாரணம் ஆயிரம்’. இந்த படத்தில் சூர்யா அப்பா, மகன் என டபுள் ஆக்ஷனில் நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான கௌதம் மேனன் இதனை இயக்கியிருந்தார்.

மேலும், முக்கிய ரோல்களில் சிம்ரன், சமீரா ரெட்டி, திவ்யா ஸ்பந்தனா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. சமீபத்தில், இந்த படத்தை திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்தனர். தற்போது, கர்நாடகாவில் மட்டும் ரூ.1.10 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus