“இந்த Platform அவங்களுக்கு ரொம்ப முக்கியம்”… தாமரைச்செல்வியை காப்பாற்ற நினைக்கும் சுருதி!

  • November 1, 2021 / 06:01 PM IST

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 5 கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது. இந்த சீசன் 5-யில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருந்தார்கள்.

தினமும் பல பிரபலங்களின் பெயர்களை குறிப்பிட்ட வண்ணம் இருந்தது கோலிவுட் வட்டாரம். பின், இந்த நிகழ்ச்சியில் இசை வாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா தேஷ்பாண்டே, அபிநய், பாவனி ரெட்டி, சின்னப்பொண்ணு, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, சுருதி, அக்ஷரா ரெட்டி, ஐக்கி பெர்ரி, தாமரைச்செல்வி, சிபி, நிரூப் ஆகிய 18 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி நமீதா மாரிமுத்து தவிர்க்க முடியாத சில காரணங்களால் வெளியேறி விட்டார். கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி நாடியா சங் எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த அக்டோபர் 24-ஆம் தேதி அபிஷேக் ராஜா எலிமினேட் செய்யப்பட்டார். நேற்றைய பிக் பாஸ் ஷோவில் சின்னப்பொண்ணு எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது, விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது.

இந்த ப்ரோமோ வீடியோவில் ‘பிக் பாஸ்’ குரலில் “பிக் பாஸ் வீட்டோட இரண்டு நபர்களை இந்த வார எவிக்ஷன் பிராஸஸ்ல இருந்து காப்பற்றலாம்” என்று ஒலிக்கிறது. இதனைத் தொடர்ந்து சுருதி “தாமரை அக்காவை காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கிறேன். அவங்களுக்கு இந்த Platform ரொம்ப முக்கியம்” என்று சொல்கிறார். இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus