உலகத் தரத்தில் சூர்யா 42 போஸ்டர்! மாஸ் காட்டும் ரசிகர்கள்

  • February 7, 2023 / 02:39 PM IST

நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தை இயக்கியவர் இயக்குனர் பாண்டியராஜ். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது. .

இந்த நிலையில் நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் . படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது .

மிக பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் 10 மொழிகள் வெளியாக உள்ளது . மேலும் 3டி தொழில்நுட்பத்தில் இந்த படம் உருவாக உள்ளது என்றும் படக்குழு அறிவித்துள்ளது . இந்த படத்தில் சூர்யா 5 கதாபாத்திரங்களில் 13 கெட்டப்களில் நடித்து வருகிறார் என்ற செய்தி சூர்யா ரசிகர்களுக்கு உற்சாகத்தை தந்துள்ளது .

இந்நிலையில் சூர்யா ரசிகர்கள் தாங்களாகவே இந்த படத்திற்கு வித விதமான போஸ்டர்களை தயார் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். தற்போது இந்த போஸ்டர்கள் வைரலாகி வருகின்றன. மேலும் இந்த போஸ்டர் ஹாலிவுட் படத்தின் போஸ்டர்களை போல சிறப்பாக உள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus