சூர்யா 42 – தலைப்பு எப்போது வெளியாகும் ?

  • February 3, 2023 / 10:50 AM IST

நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தை இயக்கியவர் இயக்குனர் பாண்டியராஜ். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது. .

இந்த நிலையில் நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் . படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது .

மிக பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் 10 மொழிகள் வெளியாக உள்ளது . மேலும் 3டி தொழில்நுட்பத்தில் இந்த படம் உருவாக உள்ளது என்றும் படக்குழு அறிவித்துள்ளது . இந்த படத்தில் சூர்யா 5 கதாபாத்திரங்களில் 13 கெட்டப்களில் நடித்து வருகிறார் என்ற செய்தி சூர்யா ரசிகர்களுக்கு உற்சாகத்தை தந்துள்ளது .

இது ஒரு பக்கம் இருக்க சூர்யா ரசிகர்கள் படத்தின் தலைப்பை அறிவிக்க கோரி சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து கேட்டு வருகின்றனர் .இதற்கு பதில் அளித்துள்ள தயாரிப்பாளர் தனஜெயன் ” ரசிகர்களின் அற்புதமான கோரிக்கை. அதைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. சரியான அப்டேட் (தலைப்பு அறிவிப்பு) விரைவில் வரும் என்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அதை விரைவில் அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus