நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தை இயக்கியவர் இயக்குனர் பாண்டியராஜ். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது. .
இந்த நிலையில் நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் . படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது .
மிக பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் 10 மொழிகள் வெளியாக உள்ளது . மேலும் 3டி தொழில்நுட்பத்தில் இந்த படம் உருவாக உள்ளது என்றும் படக்குழு அறிவித்துள்ளது . இந்த படத்தில் சூர்யா 5 கதாபாத்திரங்களில் 13 கெட்டப்களில் நடித்து வருகிறார் என்ற செய்தி சூர்யா ரசிகர்களுக்கு உற்சாகத்தை தந்துள்ளது .
இந்நிலையில் சூர்யா இந்த படத்திற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்து வருகிறார் . தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது .
• @Suriya_Offl Gearing Up For #Suriya42 | No Signs Of Slowing Down Even At 47!! pic.twitter.com/xwBqqeXtyE
— ™ (@SuriyaFansTeam) February 11, 2023