விபத்தில் சிக்கிய சுதா கொங்கரா ! இக்கட்டான கட்டத்தில் மாட்டிக்கொண்ட சூர்யா !

  • February 9, 2023 / 07:56 PM IST

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியான படம் சூரைப்போற்று . இந்த படத்தை இயக்கியவர் சுதா கொங்கரா . அபர்ணா பாலமுரளி இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து இருந்தார். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் . மிக பெரிய வரவேற்பை இந்த படம் சூர்யாவுக்கு பெற்று தந்தது .

இந்த நிலையில் சூரரைப்போற்று படத்தின் ரீமேக்கை நடிகர் சூர்யா மற்றும் விக்ரம் மல்ஹோத்ரா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர் . . சூர்யா நடித்த மாறன் கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமார் நடித்து வருகிறார் . நடிகை அபர்ணா பாலமுரளி நடித்த கதாபாத்திரத்தில் ராதிகா மதன் நடித்து வருகிறார். சுதா கொங்கரா இந்த படத்தை இயக்கி வருகிறார் .

இந்த படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ் தான் இசையமைக்கிறார் . மேலும் இந்த படத்திற்கு புதிதாக பின்னணி இசையும் பாடலும் தயாராகி கொண்டு இருப்பதாக ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார் . மேலும் இந்த படத்தில் நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் . இந்த படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது .

இந்நிலையில் சுதா கொங்கராவுக்கு சமீபத்தில் சிறிய விபத்து ஏற்பட்டு கையில் அடிபட்டுள்ளது .இதனால் தற்போது ஹிந்தி சூரரைப்போற்று படம் தள்ளிப்போக வாய்ப்புள்ளது . மேலும் சூர்யாவை வைத்து சுதா இயக்க இருந்த படமும் தள்ளி போகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது .

நடிகர் சூர்யா வாடிவாசல் மற்றும் சுதா கொங்கராவின் அடுத்த படம் என இரண்டிலும் ஒரே நேரத்தில் நடிக்கலாம் என்ற முடிவில் இருந்தார் தற்போது அவரின் இந்த திட்டத்தில் மண் விழுந்த மாதிரி ஆகிவிட்டது . நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்று சொல்வார்களே அந்த கதை மாதிரி ஆகிவிட்டது .

 

 

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus