2009 ஆம் ஆண்டு வெளிவந்த “வெண்ணிலா கபடி குழு” படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் சுசீந்திரன்.
நான் மகான் அல்ல, பாண்டியநாடு, ஜீவா, ஆதலால் காதல் செய்வீர், பாயும்புலி, சாம்பியன் போன்ற திரைப்படங்களை இயக்கி தமிழ் திரை உலகில் தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறார் சுசீந்திரன்.
தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் இந்த பான்டெமிக் தொடர்பான திரில்லர் கதையில் நடிகர் ஜெய் நடிக்கப் போவதாகவும், இவருக்கு ஜோடியாக பிரபல செய்தி வாசிப்பாளர் திவ்யா துரைசாமி நடிக்கவுள்ளதாகவும் தற்போது செய்தி வந்துள்ளது.
மேலும் இந்த படத்தில் நடிகர் ஜெய்யுடன் நடிகர் ஆதி, இந்த படத்தில் இணையவுள்ளதாகவும் இந்த இரு ஹீரோக்களும் முதல் முறையாக இணைந்து நடிக்கும் திரைப்படம் இதுதான் என்றும் தற்போது செய்தி வந்துள்ளது.
மேலும் இந்த திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகவுள்ளதாம். இந்த திரைப்படத்தின் மற்ற நடிகர்களுக்கான தேர்வுகள் நடைபெற்று வருவதாகவும் இதற்கான அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. விரைவில் இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.
When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.