பிரபல பாலிவுட் திரைப்பட நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் சென்ற ஞாயிற்றுக்கிழமை காலை தனது மும்பையில் உள்ள இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த இளம் வயது பிரபலத்தின் திடீர் மரணம் பாலிவுட் திரைப்பட உலகையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இவரின் இறுதி சடங்கு நேற்று மும்பையில் நடந்தது.இதையடுத்து இவரின் சகோதரர் மனைவி சுதா தேவி நேற்று பீஹாரில் காலமானார். சுஷாந்தின் இறப்புச் செய்தி கேட்டது முதலே இவர் உணவு அருந்தவில்லை என்றும், அந்த சோகத்திலேயே இவர் உயிர் பிரிந்தது என்றும் கூறப்படுகிறது.
சுஷாந்த் சிங் மரணம் குறித்து பல செய்திகள் பரவி வருகிறது.
இதில் மன அழுத்தப் பிரச்சினை காரணமாக பல மாதங்கள் இவர் சிகிச்சை பெற்று வந்தார் என்றும், அதிலிருந்து விடுபட யோகா ,உடற்பயிற்சி என்று ஏதேனும் ஒன்று செய்து கொண்டுதான் வந்தார் என்றும் செய்திகள் வந்துள்ளன.
சுஷாந்தின் மரணத்திற்கு பல திரைப்பட பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அரசியல்வாதிகளும் தங்கள் இரங்கலை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இவரின் மரணத்திற்கு பிரதமர் மோடி அவர்கள் ,தனது இரங்கலை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சில பாலிவுட் பிரபலங்கள் இவர் இறப்புக்கு இரங்கல் தெரிவிக்கும் பலரை ,’ சரியான நேரத்தில் உதவி செய்யாமல் தற்போது இரங்கல் தெரிவித்து என்ன பயன்’ என்று குறை கூறியும் வருகிறார்கள்.
இவரின் இறுதிச்சடங்கு நேற்று மும்பையில் நடைபெற்றது.இதில் பாலிவுட் பிரபலங்கள் மற்றும் அவரது உறவினர்கள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். இவரின் இறப்பு அவரது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.