சமீபத்தில் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தனது மும்பை இல்லத்தில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
இவர் தற்கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சுமார் 40 பேரிடம் தற்போது வரை விசாரணை நடத்தி உள்ளார்கள். இந்நிலையில் தற்போது சுஷாந்த் சிங் ராஜ்புத் தந்தை அவரது காதலியான ரியா சக்கரவர்த்தி தான் சுஷாந்தின் மன அழுத்தத்திற்கும் தற்கொலைக்கும் காரணம் என்றும், அவர் சுஷாந்த்திடம் பணம் கையாடல் செய்துள்ளதாகவும் தற்போது போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதை உறுதி செய்யும் விதமாக சுஷாந்த் சிங் அக்கவுண்டில் இருந்த கோடிக்கணக்கில் பணம் அவருக்கு தெரியாமல் ட்ரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளதாம். மேலும் மன அழுத்தத்தில் இருந்த சுஷாந்திற்கு மீண்டும் மன அழுத்தம் கொடுத்து அவரின் உடைமைகளை கைப்பற்றியுள்ளாராம் அவரது காதலி ரியா சக்கரவர்த்தி.
இப்படி அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டு தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் போலீசார் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடைசியாக கூகுளில் எதை சர்ச் செய்தார் என்ற விபரத்தை வெளியிட்டுள்ளார்கள்.
வலியில்லா மரணம், இருதுருவ நோய் என்னும் மனக் குறைபாடு, மனச்சிதைவு ஆகியவற்றை குறித்துதான் சுஷாந்த் சிங் கடைசியாக கூகுளில் தேடி உள்ளாராம். இந்த செய்தியை போலீசார் வெளியிட்டதிலிருந்து பலரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.