எஸ்.ஜே.சூர்யாவிற்காக களமிறங்கும் டி.ராஜேந்தர்

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் மாநாடு.இந்த படத்தில் சிம்புவிற்கு வில்லனாக நடித்து அசத்தியவர் எஸ்.ஜே.சூர்யா .

இந்த படத்தின் வெற்றி சிம்பு , எஸ்.ஜே.சூர்யா , வெங்கட் பிரபு என படத்தில் வேலை செய்த பலரையும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி உள்ளது.

இந்த நிலையில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு தொடர்ந்து பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்துத்கொண்டு இருக்கிறது.

மாநாடு படத்திற்கு பிறகு அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து முடித்துள்ள படம் டான். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் மே 13ம் தேதி வெளியாகிறது.

இந்த நிலையில் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடித்துள்ள கடமையை செய் என்கிற படமும் இதே மே மாதம் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. யாஷிகா ஆனந்த கதாநாயாகியாக இந்த படத்தில் நடித்துள்ளார். சுந்தர்.சி‌ நடிப்பில் வெளியான முத்தின கத்திரிக்காய் என்கிற படத்தை இயக்கிய வெங்கட்ராமன் இந்த படத்தை இயக்கி உள்ளார்.

இந்நிலையில் எஸ்.ஜே.சூர்யாவின் இந்த படத்தை தமிழகம் முழுவதும் சிம்புவின் தந்தையான டி.ராஜேந்தர்
அவரது சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் மூலம் வெளியிடுகிறார் என்ற தகவல் வெளியாகிறது. மாநாடு படத்தில் சிம்புவிற்கு எஸ்.ஜே.சூர்யாவுக்கு நல்ல நட்பு உருவாகி இருக்கின்றது.இதன் காரணமாகவே டி.ராஜேந்தர் இந்த படத்தை வெளியிடுகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

Share.