ஜிம்மில் வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் நடிகை டாப்சி!

  • February 20, 2023 / 07:35 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் டாப்சி பன்னு. 2011-ஆம் ஆண்டு ரிலீஸான ‘ஆடுகளம்’ என்ற படம் தான் டாப்சி பன்னுக்கு வாய்ப்பு கிடைத்த முதல் தமிழ் படம். ‘ஆடுகளம்’ படம் சூப்பர் ஹிட்டானதும், நடிகை டாப்சிக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2, கேம் ஓவர், அனபெல் சேதுபதி’ என தமிழ் படங்கள் குவிந்தது. டாப்சி தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்து, அங்கையும் தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி சாதனை படைத்திருக்கிறார்.

இப்போது நடிகை டாப்சி பன்னு நடிப்பில் தமிழ் மொழியில் இரண்டு படங்களும், ஹிந்தி மொழியில் மூன்று படங்களும் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் ஸ்டில்லை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில் இளசுகளை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus