இதுவரை இல்லாத ஒரு மாற்றம் நிறைந்த பயத்துடனும், வருங்காலம் குறித்த நிச்சயமற்றத் தன்மையுடனும் மக்கள் நாள்களைக் கடத்தி வருவது வேதனையளிப்பதாக நடிகை தீபிகா படுகோன் தெரிவித்துள்ளார்.
ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட தீபிகா படுகோன், திருமணத்திற்கு பிறகும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். தற்போது நீடித்து வரும் லாக்டவுனால் திரைபிரபலங்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். தங்களுக்கு பிடித்த
உணவுகளை சமைத்து இன்ஸ்டாவில் பதிவு செய்து வருகின்றனர். ஆனால், தீபிகா படுகோன் இந்த லாக்டவுனை வித்தியாசமாக கழித்து வருகிறார் .
கடந்த 2015ஆம் ஆண்டு முதல் தனது ‘லிவ் லவ் லாஃப்’ நிறுவனம் மூலம் தொடர்ந்து மனநலன் பேணுவது குறித்து பேசியும், விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகிறார் தீபிகா படுகோன். இதற்காக, இந்த வருட ஆரம்பத்தில் உலக பொருளாதார அமைப்பின்
க்ரிஸ்டல் விருதையும் அவர் பெற்றிருந்தார். இந்நிலையில், லாக்டவுன் தொடர்பாக தனது சுட்டுரை பக்கத்தில், “கடந்த சில வாரங்கள் வழக்கத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு, பயத்துடனும், வருங்காலம் குறித்து நிதர்சனமற்ற தன்மையுடன் மக்கள்
அனைவரும் தங்களது வாழ்நாளை கடத்தி வருவது தனக்கு வேதனையளிக்கிறது” என தெரிவித்துள்ளார்.
உலக மனநல விழிப்புணர்வு மாதமான இந்த மாதத்தில், மக்கள் தங்களை உற்சாகமாக வைத்துக் கொள்ளும் வகையிலும், மனநலன் பேணுதலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையிலும் இன்ஸ்டாகிராமில் ’வெல்நெஸ் கைட்’ எனும் புதிய அம்சம்
சேர்க்கபட்டுள்ளது. இன்ஸ்டாகிராமுடன் கைகோர்த்து இந்த ‘வெல்நெஸ் கைட்’ மூலம், ஊரடங்கு காலத்தில் தன்னுடைய மனநிலையை எவ்வாறு கையாண்டு வருகிறார் என்பது குறித்தும், மனநலன் பேணுவது குறித்த ஆலோசனைகளையும் தீபிகா அனைவருடனும் பகிர்ந்து வருகிறார்.