ரன்வீர் சிங்கிற்கு நன்றி சொன்ன தமன்னா ! என்ன காரணம் தெரியுமா ?

  • September 9, 2022 / 08:17 PM IST

2006-ஆம் ஆண்டு வெளியான கேடி என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் தமன்னா . அதன் பிறகு வியாபாரி , கல்லூரி உள்ளிட்ட படங்களில் நடித்து இருந்தார் . அதன் பிறகு படிக்காதவன் , அயன் ,பையா போன்ற வெற்றி படங்களில் நடித்து இருந்தார் .

தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் நடித்து வெற்றி பெற்றார் தமன்னா . இந்திய சினிமாவில் மிகப்பெரிய வெற்றிப் படமான பாகுபலி படத்திலும் இவர் நடித்து இருந்தார் . பாகுபலி படத்திற்கு பிறகு இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்த நிலையில் பெரிதாக பட வாய்ப்பு வரவில்லை. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான பெட்ரோமேஸ் , உள்ளிட்ட சில படங்களும் பெரிதாக வெற்றி பெறவில்லை .

தமிழில் இவர் நடித்த நவம்பர் ஸ்டோரி என்னும் வெப் சீரிஸ் மட்டும் நல்ல வரவேற்பை பெற்றது . இதனை தொடர்ந்து தமிழில் இவர் ஜெயிலர் படத்தில் நடிக்க உள்ளார் . மேலும் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை தமன்னா இன்ஸ்டா பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர் .அந்த வகையில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை பப்லி பௌன்சர் என்கிற படத்திற்காக சமீபத்தில் சந்தித்துள்ளார் . அந்த விளம்பரப்படுத்தும் வகையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது .அந்த வீடியோ தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து உள்ளார் . தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus