2006-ஆம் ஆண்டு வெளியான கேடி என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் தமன்னா . அதன் பிறகு வியாபாரி , கல்லூரி உள்ளிட்ட படங்களில் நடித்து இருந்தார் . அதன் பிறகு படிக்காதவன் , அயன் ,பையா போன்ற வெற்றி படங்களில் நடித்து இருந்தார் .
தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் நடித்து வெற்றி பெற்றார் தமன்னா . இந்திய சினிமாவில் மிகப்பெரிய வெற்றிப் படமான பாகுபலி படத்திலும் இவர் நடித்து இருந்தார் . பாகுபலி படத்திற்கு பிறகு இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்த நிலையில் பெரிதாக பட வாய்ப்பு வரவில்லை. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான பெட்ரோமேஸ் , உள்ளிட்ட சில படங்களும் பெரிதாக வெற்றி பெறவில்லை .
தமிழில் இவர் நடித்த நவம்பர் ஸ்டோரி என்னும் வெப் சீரிஸ் மட்டும் நல்ல வரவேற்பை பெற்றது . இதனை தொடர்ந்து தமிழில் இவர் ஜெயிலர் படத்தில் நடிக்க உள்ளார் . மேலும் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் சில படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய தமன்னா நான் மும்பையில் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தபோது 15 வயதில் சினிமா துறையில் அடி எடுத்து வைத்தேன். முதலில் ‘சான்ந் சா ரோஷன் செஹாரா’ என்ற இந்தி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானேன். அந்த படம் தோல்வியை சந்தித்தது. அதே ஆண்டு தெலுங்கில் ‘ஸ்ரீ’ என்னும் படத்தில் நடித்தேன். அதுவும் வெற்றி பெறவில்லை. இனி அவ்வளவுதான் என்று நினைத்தபோது ‘ஹேப்பி டேஸ்’ படம் மூலம் சேகர் கம்முலா என்னை கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார். அந்த படத்தின் வெற்றிக்கு பின்னால் படங்கள் குவிந்தன. தமிழ் தெலுங்கு என தொடர்ந்து வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தன.
பல படங்களில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடியும் ரசிகர்களின் பாராட்டை பெற்றேன். இன்னும் நல்ல நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்து ரசிகர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என ஆசைப்படுகிறேன்” என்றார்.