சிவனை மனமுருகி வழிபாடு செய்த தமன்னா !

  • February 21, 2023 / 10:54 AM IST

2006-ஆம் ஆண்டு வெளியான கேடி என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் தமன்னா . அதன் பிறகு வியாபாரி , கல்லூரி உள்ளிட்ட படங்களில் நடித்து இருந்தார் . அதன் பிறகு படிக்காதவன் , அயன் ,பையா போன்ற வெற்றி படங்களில் நடித்து இருந்தார் .

தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் நடித்து வெற்றி பெற்றார் தமன்னா . இந்திய சினிமாவில் மிகப்பெரிய வெற்றிப் படமான பாகுபலி படத்திலும் இவர் நடித்து இருந்தார் . பாகுபலி படத்திற்கு பிறகு இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்த நிலையில் பெரிதாக பட வாய்ப்பு வரவில்லை. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான பெட்ரோமேஸ் , உள்ளிட்ட சில படங்களும் பெரிதாக வெற்றி பெறவில்லை .

தமிழில் இவர் நடித்த நவம்பர் ஸ்டோரி என்னும் வெப் சீரிஸ் மட்டும் நல்ல வரவேற்பை பெற்றது . இதனை தொடர்ந்து தமிழில் இவர் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் . மேலும் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் சிவராத்திரியை முன்னிட்டு கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஈஷா மையத்தில் சிவன் வழிபாடு செய்துள்ளனர் .தற்போது அந்த வீடியோவை அவரே இன்ஸ்டாவில் பதிவிட்டு உள்ளார் . தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus