மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய நடிகை தமன்னா போட்ட ட்வீட்!
October 6, 2020 / 01:39 PM IST
|Follow Us
சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் தமன்னா. தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே நெகட்டிவ் ஷேடில் நடித்திருந்தார் தமன்னா. அந்த படம் தான் ‘கேடி’. ‘கேடி’-க்கு பிறகு கதையின் நாயகியாக நடித்த ‘கல்லூரி’ திரைப்படம் மிகப் பெரிய ஹிட்டாகி தமன்னாவுக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது.
அதன் பிறகு தமன்னாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘படிக்காதவன், அயன், ஆனந்த தாண்டவம், கண்டேன் காதலை, பையா, சுறா, தில்லாலங்கடி, சிறுத்தை, வேங்கை, வீரம், பாகுபலி, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, தோழா, தர்மதுரை, தேவி, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், ஸ்கெட்ச், பெட்ரோமாக்ஸ், ஆக்ஷன்’ என படங்கள் குவிந்தது.
தமன்னா தமிழ் மொழியில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மராத்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது, தமன்னா நடிப்பில் ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. சமீபத்தில், நடிகை தமன்னாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது, இது தொடர்பாக தமன்னா ட்விட்டரில் “நான் இப்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி விட்டேன். வீட்டிலையே தனிமைப் படுத்திக் கொண்டு, உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறேன்” என்று கூறியுள்ளார்.