முன்னணி நடிகர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசனின் மகளாகவும், பிரபல நடிகை அக்ஷரா ஹாசனின் அக்காவாக இருந்தும் திரையுலகில் தனக்கென ஒரு ஃபார்முலாவை பிடித்து அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார் ஸ்ருதி ஹாசன். ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் நடித்து கொண்டிருந்த ஸ்ருதி ஹாசனை ‘7-ஆம் அறிவு’ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகப்படுத்தி அழகு பார்த்தது தமிழ் சினிமா.
‘7-ஆம் அறிவு’ படத்துக்கு பிறகு நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘3, பூஜை, புலி, வேதாளம், சி3’ என படங்கள் குவிந்தது. நடிகையாக மட்டுமின்றி இசையிலும் அதிக ஆர்வம் உள்ள ஸ்ருதி ஹாசன் ‘உன்னைப்போல் ஒருவன்’ படத்துக்கு சூப்பராக இசையமைத்து அசத்தினார்.
மேலும், பிரபல இசையமைப்பாளர்கள் இசையமைத்த படங்களில் ‘அடியே கொல்லுதே, கண்ணழகா காலழகா, உன் விழிகளில், ஏண்டி ஏண்டி’ போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி லைக்ஸ் குவித்துள்ளார் ஸ்ருதி ஹாசன். இப்போது, நடிகை ஸ்ருதி ஹாசன் நடிப்பில் தமிழில் ‘லாபம்’, தெலுங்கில் ‘பிட்ட கதலு’, ‘வக்கீல் சாப்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், ஸ்ருதி ஹாசனின் பிறந்த நாளை (ஜனவரி 28-ஆம் தேதி) முன்னிட்டு பாப்புலர் நடிகை தமன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் அவரின் பர்த்டே ஸ்பெஷல் common dp-யை ரிலீஸ் செய்துள்ளார்.
It’s my dearest Shruti’s birthday and I am so happy to release the CDP for her birthday
An actor par excellence, a fabulous singer, and a very close friend – @shrutihaasan , we love youDesigned by : @sundar1413
.#HappyBirthdayShrutiHaasan pic.twitter.com/gmMXOcsDhn— Tamannaah Bhatia (@tamannaahspeaks) January 27, 2021