விக்ரமின் ‘ஸ்கெட்ச்’ படத்துக்காக தமன்னா வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

  • October 11, 2022 / 03:40 PM IST

சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் தமன்னா. தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே நெகட்டிவ் ஷேடில் நடித்திருந்தார் தமன்னா. அந்த படம் தான் ‘கேடி’. ‘கேடி’-க்கு பிறகு கதையின் நாயகியாக நடித்த ‘கல்லூரி’ திரைப்படம் மிகப் பெரிய ஹிட்டாகி தமன்னாவுக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது. அதன் பிறகு தமன்னாவுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘படிக்காதவன், அயன், ஆனந்த தாண்டவம், கண்டேன் காதலை, பையா, சுறா, தில்லாலங்கடி, சிறுத்தை, வேங்கை, வீரம், பாகுபலி, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, தோழா, தர்மதுரை, தேவி, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், ஸ்கெட்ச், பெட்ரோமாக்ஸ், ஆக்ஷன்’ என படங்கள் குவிந்தது.

தமன்னா தமிழ் மொழியில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மராத்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது, தமன்னா நடிப்பில் தமிழில் ‘ஜெயிலர்’, தெலுங்கில் ‘குர்துண்டா சீதகளம், தட் இஸ் மகாலக்ஷ்மி, போலா ஷங்கர்’, ஹிந்தியில் ‘போலே சுடியான்’ என 5 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

தமன்னா நடிப்பில் 2018-ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஸ்கெட்ச்’. இதில் ஹீரோவாக விக்ரம் நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான விஜய் சந்தர் இதனை இயக்கியிருந்தார். மேலும், மிக முக்கிய ரோல்களில் சூரி, பாபுராஜ், ஆர்.கே.சுரேஷ், ஸ்ரீமன், ஸ்ரீபிரியங்கா, வேல ராமமூர்த்தி மற்றும் பலர் நடித்திருந்தனர். தற்போது, இந்த படத்துக்காக நடிகை தமன்னா ரூ.1.25 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus