கோலிவுட்டின் திருநங்கை கலைஞரான ஜீவா சுப்ரமணியன், பிஜாய் நம்பியாரின் தமிழ்-இந்தி இரு மொழிகளில் உருவாகும் பாலிவுட் படத்தில் நடிக்க உள்ளார். ரஜினிகாந்தின் தர்பார் படத்தில் பாடல் காட்சியில் தோன்றிய நடிகை ஜீவா சுப்ரமணியன், இந்த படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறுகிறார்.
“இது ஒரு முக்கியமான பாத்திரம் என்றும் மேலும் தாக்கத்தை உருவாக்கும் சில அழுத்தமான வசனங்களை இவர் இந்த படத்தில் பேசி உள்ளார் என்றும் கூறப்படுகிறது . இது குறித்து ஜீவா பேசும்போது எனக்கு இன்னும் சில நாட்கள் ஷூட்டிங் பாக்கி இருக்கிறது, நாங்கள் தற்போது ஷெட்யூல் பிரேக்கில் இருக்கிறோம்,” என்று கூறியுள்ளார் .
இப்படத்தின் தமிழ் பதிப்பில் அர்ஜுன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர் , ஹிந்தி பதிப்பில் ஹர்ஷ்வர்தன் ரானே மற்றும் இஹான் பட் ஆகியோர் முதன்மை பாத்திரத்தில் நடித்து வருகின்றனர் . இருப்பினும், இரண்டு பதிப்புகளிலும் ஜீவா முக்கிய பகுதியாக இருப்பார்.
“புஷ்கர்-காயத்ரியின் சுழல் படப்பிடிப்பில் இருந்தபோது அந்த பாத்திரத்திற்காக ஆடிஷன் செய்தேன். இந்த படத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், ”என்று நடிகை ஜீவா கூறியுள்ளார் .