திரையுலக பிரபலங்கள் பலரும் பல ஆண்டுகளாக நல்ல நட்புடன் வலம் வருவதை பார்த்திருப்போம். சில பிரபலங்கள் மட்டும் பல்வேறு காரணங்களால் சிலருடன் இணைந்து பணியாற்றாமலே இருப்பார்கள். இதில் சிலர் ஏற்கனவே நல்ல நட்பில் இருந்து, பின் சில பிரச்சனையால் பேசாமல் போனவர்களும் உண்டு. இன்னும் சிலர் ஆரம்பத்தில் இருந்தே போட்டி, பொறாமையால் பேசாமல் போனவர்களும் உண்டு. அப்பிரபலங்களின் லிஸ்ட் இதோ…
1. விஜய் – மணிரத்னம் :
சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ‘தளபதி’ விஜய். இவர் நடிக்க வந்த புதிதில், டாப் இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னமுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று விரும்பி அவரிடம் பேசியிருக்கிறார். ஆனால், மணிரத்னமோ விஜய்யை வைத்து படம் இயக்க நோ சொல்லியிருக்கிறார். பின், பல ஆண்டுகளுக்கு பிறகு டாப் ஹீரோக்கள் லிஸ்டில் இடம்பிடித்த விஜய்யை வைத்து படம் பண்ண வேண்டும் என மணிரத்னம் கேட்டிருக்கிறார். ஆனால், அப்போது அவர் சொன்ன வார்த்தையை மனதில் வைத்துக் கொண்டு, இந்த முறை விஜய் நோ சொல்லி விட்டார். மணிரத்னம் அப்போது சொன்ன நோ, இன்று வரை விஜய்யுடன் இணைந்து பணியாற்ற தடையாக இருக்கிறது.
2. விஜய் – நெப்போலியன் :
சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ‘தளபதி’ விஜய். இவர் பிரபு தேவா இயக்கிய ‘போக்கிரி’ என்ற படத்தில் நடித்திருந்தார். சூப்பர் ஹிட்டான இந்த படத்தில் மிக முக்கிய ரோலில் நெப்போலியன் நடித்திருந்தார். இப்படத்தின் ஷூட்டிங்கின் போது, விஜய்யின் காட்சி எடுத்து முடிக்கப்பட்ட பிறகு அவர் கேரவனுக்கு சென்று ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, தனது நண்பர்களுடன் விஜய்யை சந்திக்க வந்த நெப்போலியனை, கேரவனுக்கு வெளியே நின்று கொண்டிருந்த செக்யூரிட்டி தடுத்து நிறுத்தியதால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. பின், சத்தம் கேட்டு கேரவனில் இருந்து வெளியே வந்த விஜய் நெப்போலியனை தவறாக பேசி விட்டார். இதனால் இவர்கள் இருவரும் ‘போக்கிரி’ படத்துக்கு பிறகு இணைந்து பணியாற்றவே இல்லை.
3. ரஜினிகாந்த் – சத்யராஜ் :
சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த். பிரபல நடிகர் சத்யராஜ், ரஜினியின் ஆன்மீக அரசியல் குறித்து பல பேட்டிகளில் தவறாக பேசியிருக்கிறார். இதனால் நடிகர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தும் – நடிகர் சத்யராஜும் இணைந்து பணியாற்ற முடியாமல் போனது.
4. அஜித் – வடிவேலு :
சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ‘தல’ அஜித். இயக்குநர் எழில் இயக்கத்தில் அஜித் நடித்திருந்த படம் ‘ராஜா’. இதில் பிரபல நடிகர் வடிவேலு மிக முக்கிய ரோலில் நடித்திருந்தார். இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித்துக்கு மரியாதை கொடுக்காமல் வடிவேலு பேசியிருக்கிறார். இதனால் இவர்கள் இருவரும் ‘ராஜா’ படத்துக்கு பிறகு இணைந்து பணியாற்றவே இல்லை.
5. தனுஷ் – வடிவேலு :
சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருந்த படம் ‘படிக்காதவன்’. இந்த படத்தில் காமெடியில் கலக்கியிருந்தார் விவேக். ஆனால், விவேக்கிற்கு முன்பு அந்த ரோலில் நடிக்க ஒப்பந்தமானது வடிவேலு தானாம். ஷூட்டிங் ஸ்பாட்டில் தனுஷுக்கும், வடிவேலுவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாம். அதன் பிறகே விவேக் கமிட்டானாராம். ‘படிக்காதவன்’ ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட சண்டைக்கு பிறகு தனுஷ் – வடிவேலு இணைந்து பணியாற்றவே இல்லை.
6. சிவகார்த்திகேயன் – சந்தானம் :
டிவி டு சினிமா வந்து சில ஆண்டுகளிலேயே முன்னணி ஹீரோக்களின் லிஸ்டில் இடம் பிடித்து மாஸ் காட்டியவர் சிவகார்த்திகேயன். ஆனால், இவரை போலவே டிவி டு சினிமா வந்து ஹீரோவாக அவதாரம் எடுத்த பிரபல நடிகர் சந்தானத்திற்கு அடுத்தடுத்து எந்த படங்களும் ஓடாமல் போனது. ஆகையால், சந்தானத்துக்கு “சிவகார்த்திகேயனுக்கு மட்டும் எப்படி எல்லாமே ஹிட் படங்களாக அமைந்து டக்கென முன்னணி நடிகர்களின் லிஸ்டில் சேர்ந்தார்” என அவர் மீது பொறாமை ஏற்பட்டது. இதனால் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றவே இல்லை.
7. சிலம்பரசன் – விஷால் :
சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிலம்பரசன். இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிப்பில் சிலம்பரசன் நடித்த படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. இந்த படத்தினால் ஏற்பட்ட பிரச்சனையினால், அப்போது நடிகர் சங்கத் தலைவராக இருந்த விஷால், சிம்புவிற்கு ரெட் கார்டு கொடுக்கப்போவதாக சொன்னார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின், இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றவே இல்லை.