திரையுலகில் வலம் வரும் நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் பல படங்கள் ஹிட் கொடுத்த பிறகு கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குவார்கள். சில திரையுலக நட்சத்திரங்கள் சினிமாவில் என்ட்ரியாவதற்கு முன்பு வேறு சில வேலைகளை செய்திருப்பார்கள். சிலர் சினிமாவிலேயே அறிமுகமாகியிருந்தாலும் அவர்களின் சம்பளம் மிகக் குறைவாக தான் இருந்திருக்கும். இப்போது, சில திரையுலக பிரபலங்கள் வாங்கிய முதல் சம்பளம் எவ்ளோ? என்பதை அவர்களிடமே கேட்டுத் தெரிந்து கொண்டோம்.
1. ரம்யா பாண்டியன் :
‘ஜோக்கர்’ என்ற தமிழ் படம் மூலம் ஃபேமஸான நடிகை ரம்யா பாண்டியன். அதன் பிறகு ‘ஆண் தேவதை’ என்ற தமிழ் படத்தில் நடித்திருந்தார். நடிகை ரம்யா பாண்டியன் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான ஸ்டில்ஸை ஷேரிட்டு வருவதால் அவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இப்போது, ரம்யா பாண்டியன் நடிப்பில் இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இவர் கல்லூரியில் படிக்கும்போதே பார்ட் டைமாக இன்சூரன்ஸ் ஏஜென்ட்டாக வேலை செய்திருக்கிறார். அங்கு வேலை பார்த்தபோது ரூ.14,000 சம்பளம் வாங்கியிருக்கிறார் ரம்யா பாண்டியன்.
2. விஜய் ஆண்டனி :
பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்த விஜய் ஆண்டனி, ஹீரோவாகவும் அவதாரம் எடுத்து சில வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறார். இப்போது விஜய் ஆண்டனி நடிப்பில் ‘அக்னிச் சிறகுகள், தமிழரசன், காக்கி, பிச்சைக்காரன் 2’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இவர் முதன் முதலாக அசிஸ்டென்ட் சவுண்ட் இன்ஜினீயராக வேலை செய்திருக்கிறார். அப்போது ரூ.600 சம்பளம் வாங்கியிருக்கிறார் விஜய் ஆண்டனி.
3. கெளதம் கார்த்திக் :
பிரபல நடிகர் ‘நவரச நாயகன்’ கார்த்திக்கின் மகனாக இருந்தும், திரையுலகில் தனக்கென ஒரு ஃபார்முலாவை பிடித்து ஹீரோவாக நடித்து வருகிறார் கெளதம் கார்த்திக். ‘கடல்’ என்ற தமிழ் படம் மூலம் அறிமுகமான கெளதம் கார்த்திக். அதன் பிறகு ‘என்னமோ ஏதோ, வை ராஜா வை, ரங்கூன், இவன் தந்திரன், இருட்டு அறையில் முரட்டு குத்து’ போன்ற படங்களில் நடித்தார். இப்போது கெளதம் கார்த்திக் நடிப்பில் இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இவர் கல்லூரியில் சேருவதற்கு முன்பே ‘ஜங்கிள் ஹட்’ என்ற ரெசார்டில் வேலை செய்திருக்கிறார். அப்போது ரூ.5000 சம்பளம் வாங்கியிருக்கிறார் கௌதம் கார்த்திக்.
4. கஸ்தூரி :
தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் பல படங்களில் ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி. இப்போது சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். ‘ஆல் இந்தியா ரேடியோ’வில் குழந்தைகளுக்கென வைக்கப்பட்ட கவிதை போட்டியில் தனது 10-வது வயதில் கலந்து கொண்டிருக்கிறார் கஸ்தூரி. அப்போது இவர் எழுதிய ஒரு ஆங்கில கவிதை செலக்ட்டாகியிருக்கிறது. பின், ரேடியோவில் அக்கவிதையை கஸ்தூரியே வாசித்து அசத்தியிருக்கிறார். இதற்காக ரூ.100 பரிசாக வாங்கியிருக்கிறார் கஸ்தூரி.
5. மிஷ்கின் :
தமிழ் சினிமாவில் ‘சித்திரம் பேசுதடி’ என்ற படம் 2006-ஆம் ஆண்டு வெளியானது. இது தான் மிஷ்கின் இயக்குநராக அறிமுகமான முதல் திரைப்படமாம். ‘சித்திரம் பேசுதடி’ படத்துக்கு பிறகு ‘அஞ்சாதே, யுத்தம் செய், முகமூடி, பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ’ போன்ற பல படங்களை இயக்கியிருக்கிறார். இதுமட்டுமின்றி, ‘நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ ஆகிய படங்களை இயக்கியதுடன், நடிக்கவும் செய்துள்ளார் மிஷ்கின். இவர் மற்ற இயக்குநர்களின் சில படங்களிலும் நடித்திருக்கிறார். மிஷ்கின் முதன் முதலாக ஒரு பஞ்சாபி சிங்கிடம் சேல்ஸ் மேனாக வேலை செய்திருக்கிறார். அப்போது ரூ.1200 சம்பளம் வாங்கியிருக்கிறார்.