இயக்குனர்கள் அட்லீ , ராம் உள்ளிட்டோருக்கு தமிழ்நாடு அரசு !

தமிழ்நாடு அரசின் 2009 முதல் 2014 வரையிலான சிறந்த திரைப்படங்கள் ,நடிகர் நடிகையர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் , சின்னத்திரை சிறந்த நெடுந்தொடர்கள் ,நடிகர் ,நடிகையர்கள் தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டோருக்கான விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் 4.9.2022 அன்று நடைபெற்றது .

இந்த விழாவிற்கு தலமை ஏற்று நடத்தியவர் மு.பெ.சாமிநாதன் மாண்புமிகு செய்தித் துறை அமைச்சர் அவர்கள் ஆவார் .2009-ஆம் ஆண்டிற்கான சிறந்த மூன்று படமாக பசங்க , மாயாண்டி குடும்பத்தினர் ,அச்சமுண்டு அச்சமுண்டு ஆகியபடங்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளது .2010-ஆண்டுக்கான சிறந்த நடிகராக நடிகர் விக்ரம் மற்றும் சிறந்த நடிகையாக நடிகை அமலா பால் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளனர் . 2011- ஆண்டுக்கான சிறந்த நடிகராக நடிகர் விமல் மற்றும் சிறந்த நடிகையாக இனியா ஆகியோருக்கு வழங்கப்பட்டது .

2012- ஆண்டுக்கான சிறந்த நடிகராக நடிகர் ஜீவா மற்றும் சிறந்த நடிகையாக நடிகை லட்சுமி மேனன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது . 2013 – ஆண்டுக்கான சிறந்த நடிகராக நடிகர் ஆர்யா மற்றும் சிறந்த நடிகையாக நடிகை நயன்தாரா ஆகியோருக்கு வழங்கப்பட்டது.2014 – ஆண்டுக்கான சிறந்த நடிகராக நடிகர் சித்தார்த் மற்றும் சிறந்த நடிகையாக நடிகை ஐஸ்வர்யா ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

மேலும் இந்த விழாவில் இமான் , ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட இசையமைப்பாளர்களுக்கு , இயக்குனர்கள் ராம் , அட்லீ , ஹச்.வினோத் ,பாண்டியராஜ் உள்ளிட்டோருக்கு விருது வழங்கப்பட்டது . தமிழ்நாடு அரசு அறிவித்த விருது பட்டியல் கீழே இணைக்கப்பட்டுள்ளது .

Share.