சினிமாவில் டாப் ஹீரோசினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் சாய் பல்லவி. இவருக்கு அமைந்த முதல் படமே நிவின் பாலியுடன் தான். அது தான் மலையாள படமான ‘ப்ரேமம்’. பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான அல்போன்ஸ் புத்திரன் இயக்கியிருந்த இந்த படம் மெகா ஹிட்டானது. இதில் சாய் பல்லவியின் நடிப்பு அவருக்கு அதிக லைக்ஸ் போட வைத்தது.யின்களில் ஒருவராக வலம் வருபவர் சாய் பல்லவி. இவருக்கு அமைந்த முதல் படமே நிவின் பாலியுடன் தான். அது தான் மலையாள படமான ‘ப்ரேமம்’. பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான அல்போன்ஸ் புத்திரன் இயக்கியிருந்த இந்த படம் மெகா ஹிட்டானது. இதில் சாய் பல்லவியின் நடிப்பு அவருக்கு அதிக லைக்ஸ் போட வைத்தது.
இந்த படத்துக்கு பிறகு நடிகை சாய் பல்லவிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் மலையாளத்தில் ‘கலி, அதிரன்’, தெலுங்கில் ‘ஃபிடா, மிடில் கிளாஸ் அப்பாயி, படி படி லேச்சே மனசு’, தமிழில் ‘தியா, மாரி 2, NGK, பாவக் கதைகள்’ என படங்கள் குவிந்தது.
சாய் பல்லவி நடிப்பில் தெலுங்கில் ‘விரத பர்வம், ஷியாம் சிங்கா ராய்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘ஷியாம் சிங்கா ராய்’ என்ற படம் கடந்த ஆண்டு (2021) டிசம்பர் 24-ஆம் தேதி ரிலீஸானது. நானி ஹீரோவாக நடித்திருந்த இந்த படம் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில், ‘ஷியாம் சிங்கா ராய்’ படத்தில் இருந்து சில ஸ்டில்ஸை ஃபேஸ்புக்கில் ஷேர் செய்த ரசிகர் ஒருவர் சாய் பல்லவியின் உருவத்தை கேலி செய்து ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார்.
தற்போது, ரசிகரின் இந்த பதிவிற்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநரும், தெலுங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் கண்டனம் தெரிவித்ததுடன், “பெண்கள் முன்னேறுவதை தடுக்க அவர்களை காயப்படுத்தி, அவர்களின் வேகத்தை தடுக்கும் எதிர்மறையான எண்ணத்தில் தான் அந்த நபர் சாய் பல்லவியின் உருவத்தை கேலி செய்திருக்கிறார்” என்று கூறியுள்ளார்.
In a live TV interview today, highlighted on Body-Shaming & its impact on women.
No woman should be discriminated on basis of their appearances/looks, color complexion & other physical characteristics.@PMOIndia @HMOIndia @MoHFW_INDIA @PTTVOnlineNews @pibchennai @ANI pic.twitter.com/rsPMLKKc7Z
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) January 27, 2022
Women should maintain their self-confidence always, as the body shamers intention is to demoralize, demotivate & destroy particularly women's progress.
Don't give room to such people.Always maintain mental strength & courage by ignoring them appropriately.@PTTVOnlineNews pic.twitter.com/nrnMpiLCS8
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) January 27, 2022