2006 ஆம் ஆண்டு ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான “கேடி” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் தமன்னா. தமிழ் ரசிகர்களிடையே தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கும் இந்த அழகுப் பதுமை தனது ஃபிட்னஸ் ரகசியத்தை சமூக வலைதளங்களில் தற்போது பதிவிட்டுள்ளார்.
இவர் தனது உடல் எடை மற்றும் ஆரோக்கியத்தை பராமரிப்பதற்காக யோகா பயிற்சி செய்து வருகிறார். இவர் யோகா செய்வது போன்ற புகைப்படங்களை தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதன்மூலம் மனது மற்றும் உடல் ஆரோக்கியத்தை பேணிக் காப்பதன் முக்கியத்துவம் குறித்து தனது ரசிகர்களுக்கு தமன்னா முன்னுதாரணமாக விளங்குகிறார்.
தமிழில் படிக்காதவன், கண்டேன் காதலை, பையா, சிறுத்தை, வேங்கை, வீரம், பாகுபலி, கத்தி சண்டை, தேவி 2 போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ள தமன்னா, தமிழில் விஜய், அஜித், தனுஷ், கார்த்தி, விஷால் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்திருக்கிறார்.
https://www.instagram.com/p/CC-q3BOpAp4/?igshid=b3161zjvmwq4
கடந்த 2019ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான “ஆக்ஷன்” என்ற கோலிவுட் படத்தில் நடித்திருந்த தமன்னா, தற்போது தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார்.