துபாயில் ஸ்கை டைவிங் செய்த ‘தாராள பிரபு’ பட ஹீரோயின்… வைரலாகும் வீடியோஸ்!

  • June 29, 2021 / 03:20 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் தன்யா ஹோப். இவருக்கு தெலுங்கில் அமைந்த முதல் படமே ஸ்ரீ விஷ்ணுவுடன் தான். அது தான் ‘அப்பட்லோ ஒகடுன்டேவாடு’. இந்த படத்துக்கு பிறகு ‘நேனு சைலஜா’ (தெலுங்கு) படத்தின் ‘நைட் இஸ் ஸ்டில் யங்’ பாடலில் சூப்பராக நடனமாடி அசத்தியிருந்தார் தன்யா ஹோப்.

‘நேனு சைலஜா’ படத்துக்கு பிறகு நடிகை தன்யா ஹோப்பிற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் தெலுங்கு மொழியில் ‘படேல் S.I.R, பேப்பர் பாய், டிஸ்கோ ராஜா’, தமிழ் மொழியில் ‘தடம், தாராள பிரபு’, கன்னட மொழியில் ‘எஜமானா, உத்கர்ஷா, அமர், காகி’ என படங்கள் குவிந்தது.

Tanya Hope's Sky Diving Video Goes Viral1

தமிழில் தன்யா ஹோப் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான ஸ்டில்ஸை ஷேரிட்டு வருவதால் இவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இப்போது, நடிகை தன்யா ஹோப் நடிப்பில் தமிழ் மொழியில் ‘குலசாமி’, கன்னட மொழியில் ‘பெல் பாட்டம் 2, ஹோம் மினிஸ்டர்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு ஸ்டில்ஸ் மற்றும் இரண்டு வீடியோக்களை வெளியிட்டுள்ளார். தன்யா ஹோப் துபாயில் ஸ்கை டைவிங் செய்தபோது எடுக்கப்பட்ட இந்த ஸ்டில்ஸ் மற்றும் வீடியோஸ் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus