டாப்ஸியின் ராஷ்மி ராக்கெட் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் விரைவில்!
August 31, 2020 / 10:46 PM IST
|Follow Us
2011ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான “ஆடுகளம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை டாப்ஸி பன்னு.
“ஆடுகளம்” படத்தை தொடர்ந்து வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2, வை ராஜா வை, கேம் ஓவர் போன்ற தமிழ் படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.
இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் தற்போது “ஜன கன மன” என்ற படத்தில் நடித்து வரும் இந்த அழகுப் பதுமை நல்ல நடிகை மட்டுமல்லாது நல்ல மனிதரும் கூட.
தற்போது இவர் பாலிவுட்டில் “ராஷ்மி ராக்கெட்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஒரு கல்லூரியின் கதை, மாத்தியோசி போன்ற திரைப்படங்களை தமிழில் இயக்கிய இயக்குனர் நந்தா பெரியசாமி இந்த படத்தின் கதையை எழுதியுள்ளாராம்.
பாலிவுட்டில் ஆஹர்ஷ் குரானா இயக்குகிறார். தற்போது இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்யப்படுவதற்கான உரிமையை பெற்றுள்ளார்களாம்.
ராஜஸ்தானில் வாழும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் போராடி அத்லெட்டாக உருவாகும் கதையை கருவாக கொண்டதுதான் ராஷ்மி ராக்கெட். இந்த படத்தின் கதையை கேட்ட டாப்ஸி மறுநிமிடமே இந்தக்கதையை ஸ்கிரிப்ட்டாக உருவாக்குமாறும் தான் இதில் நடிக்க ஆவலுடன் இருப்பதாகவும் தெரிவித்தாராம். தமிழில் இந்த கதையில் யார் நடிப்பார்கள் என்றும் நந்தா தான் தமிழில் இதை இயக்குவாரா போன்ற கேள்விகளுக்கும் அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாலிவுட்டில் இந்த படத்தில் நடிப்பதற்காக டாப்ஸி தனது உடலை மெருகேற்றி வருகிறாராம். அதுமட்டுமின்றி கடுமையான டயட்டையும் பின்பற்றி வருகிறாராம். தமிழில் இந்த கதாபாத்திரத்தில் யார் நடிப்பார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.