தெலுங்கு சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் தேஜா சஜ்ஜா. இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘ஹனுமான்’. இப்படம் கடந்த ஜனவரி 12-ஆம் தேதி பொங்கல் (சங்கராந்தி) பண்டிகையை முன்னிட்டு தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சைனீஸ், ஜப்பனீஸ் என 10 மொழிகளில் ரிலீஸானது.
சூப்பர் ஹீரோ படமான இதனை பிரபல இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் அம்ரிதா அய்யர், வரலக்ஷ்மி சரத்குமார், வினய், ராஜ் தீபக் ஷெட்டி, வெண்ணிலா கிஷோர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தை ‘ப்ரைம் ஷோ எண்டர்டெயின்மெண்ட்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, உலக அளவில் இந்த படம் ரூ.200 கோடிக்கு வசூல் சாதனை படைத்துள்ளது.
தற்போது, இதன் பார்ட் 2 ‘ஜெய் ஹனுமான்’ படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் நேற்று (ஜனவரி 22-ஆம் தேதி) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு (2025) ரிலீஸாகுமாம்.
With gratitude for the immense love and support showered upon #HanuMan from audiences across the globe, I stand at the threshold of a new journey by making a promise to myself! #JaiHanuman Pre-Production Begins on the auspicious day of #RamMandirPranPrathistha @ThePVCU pic.twitter.com/wcexuH6KFH
— Prasanth Varma (@PrasanthVarma) January 22, 2024