Hanuman : அடேங்கப்பா… 3 வாரத்தில் சூப்பர் ஹீரோ படமான ‘ஹனுமான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

  • February 2, 2024 / 02:36 PM IST

தெலுங்கு சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் தேஜா சஜ்ஜா. இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘ஹனுமான்’. இப்படம் கடந்த ஜனவரி 12-ஆம் தேதி பொங்கல் (சங்கராந்தி) பண்டிகையை முன்னிட்டு தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சைனீஸ், ஜப்பனீஸ் என 10 மொழிகளில் ரிலீஸானது.

சூப்பர் ஹீரோ படமான இதனை பிரபல இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் அம்ரிதா அய்யர், வரலக்ஷ்மி சரத்குமார், வினய், ராஜ் தீபக் ஷெட்டி, வெண்ணிலா கிஷோர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை ‘ப்ரைம் ஷோ எண்டர்டெயின்மெண்ட்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 21 நாட்களில் இந்த படம் உலக அளவில் ரூ.273.10 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus